Home இந்தியா நாடாளுமன்ற தலைவராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுமித்ரா மகாஜன் தேர்வாக வாய்ப்பு!

நாடாளுமன்ற தலைவராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுமித்ரா மகாஜன் தேர்வாக வாய்ப்பு!

574
0
SHARE
Ad

LANDPIXபுதுடில்லி, ஜூன் 6 – மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமித்ராவுக்கு, மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அப்பதவி கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் சிபாரிசின் பேரில் சுமித்ராவுக்கு நாடாளுமன்ற தலைவராக தேர்வாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பான இறுதி முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று தான் எடுக்கப்படும். இந்நிலையில், நாடாளுமன்ற தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுமித்ரா மகாஜன் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் தெரிகிறது.

#TamilSchoolmychoice

கடந்த ஆட்சியின் 15-ஆவது நாடாளுமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸின் மீராகுமார். முதல் பெண் மக்களவைத் தலைவர் என்ற பெருமையைப் பெற்ற மீரா குமாரைத் தொடர்ந்து, இப்போதைய 16-ஆவது நாடாளுமன்றத்திலும் பெண் ஒருவரே தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தோரில் பிறந்து வளர்ந்தவரான சுமித்ரா மகாஜன் (71) அதே தொகுதியில் 1989 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் 1999 முதல் 2004 வரை மத்திய இணை அமைச்சராக சுமித்ரா பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் தம்பித்துரைக்கு துணை சபாநாயகர் பதவி?

நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி 44 இடங்களில்  மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் எதிர்கட்சி அந்தஸ்து கிடைக்காது.

காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள  அதிமுகவிற்கு துணை சபாநாயகர் பதவியை கொடுக்க பாஜக தலைவர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எனவே முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதற்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அதிமுகவிற்கு துணை சபாநாயகர் பதவியை கொடுக்க, பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று தம்பித்துரை ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படும் என்று டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.