Home நாடு இனி மலேசியர்கள் விசா இன்றி அமெரிக்கா செல்லலாம் – 18 மாதங்களில் திட்டம் நிறைவேற்றம்!

இனி மலேசியர்கள் விசா இன்றி அமெரிக்கா செல்லலாம் – 18 மாதங்களில் திட்டம் நிறைவேற்றம்!

599
0
SHARE
Ad

America

புத்ராஜெயா, ஜூன் 6 – அமெரிக்க தூதரகத்துடன் மலேசியக் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர். அது செயல்படுத்தப்பட்டால் இன்னும் 18 மாதங்களில் மலேசியர்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான விசா தளர்வு செய்யப்படும் என உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி அறிவித்துள்ளார்.

அமெரிக்க விசா தளர்வு திட்டத்தின் கீழ் இன்னும் சில மாதங்களில் இந்த விசா தளர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சாஹிட் உறுதிபட தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மலேசிய வருகையின் போது இது குறித்து அரசாங்கம் அவருடன் கலந்தாலோசித்ததாகவும், அமெரிக்க விசா தளர்வு திட்டத்தில் மலேசியாவையும் சேர்த்துக் கொள்ள ஒபாமா ஒப்புக்கொண்டதாகவும் சாஹிட் தெரிவித்தார்.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், மலேசியர்கள் தொழில் சம்பந்தமாகவோ அல்லது சுற்றுலாவிற்கோ 90 நாட்கள் வரை விசா இன்றி அமெரிக்காவில் தங்கலாம்.

அமெரிக்க விசா தளர்வு திட்டத்தின் கீழ், விசா இன்றி அமெரிக்காவிற்கு சென்று வரும் 38 நாடுகளின் பட்டியல் அமெரிக்க தூதரகத்தின் அகப்பக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.