Home Featured வணிகம் இருமடங்காக்கப்பட்ட எச்1பி விசா – இந்திய பணியாளர்களை விரும்பாத அமெரிக்கா!

இருமடங்காக்கப்பட்ட எச்1பி விசா – இந்திய பணியாளர்களை விரும்பாத அமெரிக்கா!

590
0
SHARE
Ad

h1b-visa-நியூ யார்க் – இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்குபவை தான். அந்நிறுவனங்கள் இங்கிருக்கும் பணியாளர்களை ‘ஆன்சைட் பிராசஸ்’ (Onsite Process)-காக அமெரிக்கா அனுப்புவது வழக்கம். அப்படி அமெரிக்கா சென்று அந்நாட்டு குடியுரிமை இன்றி அங்கு தங்கி பணிபுரிய விரும்புவோருக்கு எச்1பி, எல்–1 விசா வழங்கப்படுகிறது.

இந்த விசா செயல்முறையில் தான் அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளையும், பல்வேறு அதிரடி மாற்றங்களையும் செய்துள்ளது. வழக்கமான விசா கட்டணங்களைக் காட்டிலும் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அமெரிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், இதுவரை வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வந்த 85 ஆயிரம் ‘எச்1பி விசா’ தற்போது 70 ஆயிரமாக குறைப்பதற்கு முக்கிய மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகளுக்கான காரணம் பற்றி வெளியாகி உள்ள தகவலில், அமெரிக்கர்களைக் காட்டிலும் இந்தியப் பணியாளர்களையே தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியில் அமர்த்த விரும்புகின்றன. அப்படி விசா பெற்று, பணியில் சேரும் ஊழியர்கள் அடுத்த சில வருடங்களில் நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கின்றனர். இதனால் அமெரிக்க பிரஜைகளுக்கு பெரும் சிக்கல் ஏற்படுகிறது.

#TamilSchoolmychoice

நீண்ட நாட்களாக சர்ச்சையில் இருந்து வந்த இந்த பிரச்சனை தான் தற்போது பூதாகரமாகி உள்ளது. புதிய விசா கொள்கைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டுமல்ல இந்திய-அமெரிக்க உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து இந்தியப் பிரதமர் மோடி, தொலைபேசி வாயிலாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.