Home நாடு அமெரிக்கா செல்ல மலேசியர்களுக்கு விசா தேவையில்லையா? பொய்ச் செய்தி!

அமெரிக்கா செல்ல மலேசியர்களுக்கு விசா தேவையில்லையா? பொய்ச் செய்தி!

810
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அமெரிக்கா செல்லும் 9 நாடுகளின் பயணிகளுக்கு இனி விசா தேவையில்லை என்றும் அந்த 9 நாடுகளில் மலேசியாவும் ஒன்று எனவும் சில இணையத் தளங்களில் நேற்று புதன்கிழமை செய்திகள் வெளியிடப்பட்டன.

அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் மலேசியர்களுக்கு 6 மாதங்கள் வரை விசா தேவையில்லை என்ற இந்த அறிவிப்பால் பலர் குதூகலமடைந்தனர். எனினும் கோலாலம்பூரிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உடனடியாக அந்தச் செய்தி உண்மையில்லை என அறிவித்தது.

அமெரிக்காவுக்கான விசா திட்டம் குறித்த எந்த ஓர் அறிவிப்பையும் அமெரிக்கா அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

அத்தகைய ஓர் அறிவிப்பை அமெரிக்கா வெளியிடுவதானால் அதனை முறையாகச் செய்யும் என்றும் அதிகாரத்துவ இணையத் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் அந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமெரிக்கத் தூதரகம் கூறியிருக்கின்றது.