Home நாடு மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தின் அதிகாரபூர்வ தொடக்கவிழா

மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தின் அதிகாரபூர்வ தொடக்கவிழா

1956
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் தமிழ் மொழிக்கான களஞ்சியங்களைப் பாதுகாக்கும் முயற்சியாக மலேசியத் தமிழ் மொழிக் காப்பகத்தின் அதிகாரபூர்வத் தொடக்க விழா எதிர்வரும் 3 மே 2019-ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் நடைபெறுகிறது.

கோலாலம்பூர் மெனாரா தேவான் பகாசா டான் புஸ்தாக்கா கட்டடத்தின் 31 ஆம் மாடியிலுள்ள துன் சிறீ இலானாங் அறையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மலேசியக் காப்பகத்தின் திறப்பு விழாவுக்கு கல்வி துணையமைச்சர் தியோ நீ சிங் சிறப்பு வருகை மேற்கொள்வார்.

#TamilSchoolmychoice

டேவான் பகாசா டான் புஸ்தாக்கா அமைப்பின் தலைமை இயக்குநரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.

மலேசியக் காவல் துறையின் முன்னாள் உயர் அதிகாரி டத்தோஸ்ரீ தெய்வீகன், தமிழ் மொழி காப்பகத்தின் நிருவாகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

சீன மொழிக் காப்பகத்தின் நிருவாகத் தலைவர் டத்தோ கோ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.