Home One Line P1 மாணவர்கள் சம்பந்தமான பழைய காணொளிகளை விசாரிக்காமல் பகிராதீர்கள்! கல்வி அமைச்சு

மாணவர்கள் சம்பந்தமான பழைய காணொளிகளை விசாரிக்காமல் பகிராதீர்கள்! கல்வி அமைச்சு

695
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வெளிநாடுகளில் அல்லது நீண்டகால மாணவர் விவகாரங்களின் காணொளிகளை வெளியிட வேண்டாம் என்று துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

மலேசியாவில் குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படும் அக்குற்றவாளி இந்த விவகாரம் மீண்டும் வெளிக்கொண்டுவரும் போது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்றும், வெளிநாட்டு பிரச்சனைகள் தனது அமைச்சகத்துடன் தொடர்புடையதல்ல என்றும் அவர் கூறினார்.

கடந்த கால சம்பவங்களின் காணொளிகள் இன்னும் தமக்கு கிடைத்ததாக தியோ கூறினார். அவற்றில் சில 2016- இல் நிகழ்ந்தவை என்றும், அண்டை நாடுகளில் நடந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

” ஒரு காணொளியை அனுப்பும் போது, அது புதிய வழக்கா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு நான் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். பழைய காணொளியைப் பகிரும்போது, ​​மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளிகள் மீண்டும் பாதிக்கப்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.