Home One Line P2 கொவிட்-19 கிருமியின் படங்களை வெளியிட்ட அமெரிக்க அறிவியலாளர்கள்!

கொவிட்-19 கிருமியின் படங்களை வெளியிட்ட அமெரிக்க அறிவியலாளர்கள்!

654
0
SHARE
Ad
படம்: நன்றி தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான (என்ஐஐஐடி)

வாஷிங்டன்: தற்போது உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் கொவிட்-19 கிருமி இதுவரையிலும் 1,700- க்கும் மேற்பட்ட உயிர்களை எடுத்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கடந்த ஜனவரி மாதம் வேகமாகப் பரவத் தொடங்கிய இந்த கிருமியின் தோற்றத்தை புரிந்து கொள்ள கடுமையாக உழைத்து வருகின்றனர்.

டம்: நன்றி தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான (என்ஐஐஐடி)

பிப்ரவரி 11-ஆம் தேதியன்று, அமெரிக்காவின் மொன்டானாவில் உள்ள தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான (என்ஐஐஐடி) நிபுணர்கள், பல்வேறு வகையான எலக்ட்ரான் ஸ்கேனிங் நுண்ணோக்கிகளைப் பயன்படுத்தி கொரொனாவைரஸின் சமீபத்திய படங்கள் அடங்கிய படத்தொகுப்புகளை பதிவேற்றினர்.

படம்: நன்றி தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான (என்ஐஐஐடி)
#TamilSchoolmychoice

இந்த ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி கொவிட்-19 கிருமிக்கு காரணமான சார்ஸ்- கொவி-2-ஐ (மஞ்சள்) காட்டுகிறது. அமெரிக்காவில் உள்ள நோயாளிகளிடமிருந்து இந்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

சார்ஸ்- கொவி-2 கிருமியை ஆரஞ்சு நிறத்தில் உள்ள படம் காட்டுகிறது. இதுவும் அமெரிக்காவில் உள்ள ஒரு நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்டது.