Home நாடு “ஆண்-பெண் குடும்ப உறவுகளுக்கும், உழைப்புக்கும் முக்கியத்துவம் தருவோம்” – வேதமூர்த்தியின் தொழிலாளர் தின செய்தி

“ஆண்-பெண் குடும்ப உறவுகளுக்கும், உழைப்புக்கும் முக்கியத்துவம் தருவோம்” – வேதமூர்த்தியின் தொழிலாளர் தின செய்தி

1014
0
SHARE
Ad

புத்ராஜெயா: மலேசியக் குடிமக்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகளை தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறையின் சார்பில் தெரிவித்துக் கொண்ட பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி “கடந்த நூற்றாண்டின் மையப் பகுதிவரை உழைப்பாளர் என்றால், வருமானத்தை ஈட்டும் ஆண்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டனர். இப்பொழுது ஆண் – பெண் இருபாலரும் இணைந்தே எங்கும் பணி புரிகின்றனர். இருந்தாலும், பெண்களுக்கு வீட்டுப் பணி எப்போதும் சுமையாகவே இருக்கிறது. மாறிவரும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், பெரும்பாலும் கணவன்-மனைவி இருவரும் இணைந்துதான் குடும்ப பாரத்தை சுமக்கின்றனர்” என தனது மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“ஒவ்வொரு மனிதரும் ஏதோவொரு வகையில், வாழ்க்கையில் உழைப்பை வெளிப்படுத்திய வண்ணமாகத்தான் இருக்கின்றார். மொத்ததில் குடும்பத்தில் நிலவும் குதூகலம் சமூக வீதியிலும் நாட்டிலும் பிரதிபலிக்கும் என்பதால், உழைப்பிற்கும் குடும்ப மகிழ்ச்சிக்கும் முன்னுரிமை அளிப்பதை மே-1 தொழிலாளர் தின சிந்தனையாகக் கொள்வோம்” என்று பிரதமர் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.