Home நாடு சபா: ஊழல் விவகாரத்தில் புங் மொக்தார் மற்றும் அவரது மனைவி கைது!

சபா: ஊழல் விவகாரத்தில் புங் மொக்தார் மற்றும் அவரது மனைவி கைது!

1239
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: அரசாங்க நிறுவனமான பெல்க்ரா அமைப்பின் பல மில்லியன் கணக்கான பணத்தை ஊழல் செய்ததன் பேரில் கோத்தா கினபாலு நாடாளுமன்ற உறுப்பினரும் சபா மாநில அம்னோ கட்சித் தலைவருமான புங் மொக்தார் மற்றும் அவரது மனைவி ஷிஷிய் அய்ஸெட்டும் நேற்று புதன்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இந்த விவகாரம் குறித்த விசாரணைக்காக ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு வந்திருந்த போது, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு சில மணிநேர விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் விடுவிக்கப்பட்டதோடு, நாளை வெள்ளிக்கிழமை கோலாலம்பூரிலுள்ள அமர்வு நீதிமன்றத்தில் இருவரும் குற்றம் சாட்டப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.