கிராபிக்ஸ் அனிமேஷனில் பிரமாண்ட படமாக இது பேசப்பட்டது. உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலையும் குவித்தது. இதன் இரண்டாம் பாகம் ‘எந்திரன்–2’ என்ற பெயரில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
இதற்கான பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. படத்துக்கான கதை மற்றும் திரைக்கதையை ஷங்கர் தயார் செய்து ரஜினியிடம் சொல்லி ஒப்புதல் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தை எடுக்க ரூ.200 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோல் ரஜினியும் ‘லிங்கா’ படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதரபாத்தில் துவங்கியுள்ளது.
இப்படங்களை முடித்து விட்டு இருவரும் ‘எந்திரன்–2’ படத்துக்கு வருகிறார்கள். ஐஸ்வர்யாராயையே எந்திரன்–2 படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதற்காக அவரிடம் பேச்சு நடப்பதாக தெரிகிறது.