Home கலை உலகம் அஜீத் படக்கதை கசிந்தது: படக்குழுவினர் அதிர்ச்சி!

அஜீத் படக்கதை கசிந்தது: படக்குழுவினர் அதிர்ச்சி!

560
0
SHARE
Ad

Ajith-சென்னை, ஜூன் 10 – அஜீத் நடிக்கும் புது படத்தின் கதை கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆயிரம் தோட்டாக்கள் என்ற தலைப்பை பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படக் கதையை ரகசியமாக வைத்திருந்தனர். இந்த நிலையில் இப்படத்தின் முழு கதையும் இணையத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜீத்துடன் அனுஷ்கா, திரிஷா ஆகிய இரு நாயகிகள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இதில் திரிஷா கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டு இருக்கும் போது மர்ம மனிதர்கள் வழி மறிக்கின்றனர். திரிஷாவை காரில் இருந்து இறக்கி ரோட்டிலேயே படுகொலை செய்கின்றனர்.

பின்னர் பிணத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விடுகின்றனர். இந்த கொலை வழக்கு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. கொலையாளிகளை கண்டு பிடிக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரி அஜீத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

அவருக்கு அனுஷ்கா உதவி செய்கிறார். இருவரும் துப்பு துலக்குகின்றனர். அப்போது கொலை பின்னணியில் பயங்கர சதி திட்டம் இருப்பது தெரிய வருகிறது. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதை கண்டு பிடிக்கிறார்.

அவர்களை கூண்டோடு பிடித்து குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பதே படத்தின் கதையாம். இந்த கதையை படக்குழுவை சேர்ந்த ஒருவர்தான் வெளியிட்டு விட்டாராம். அவரிடம் விசாரணை நடக்கிறது. கதை கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.