Home நாடு பழனிவேலுக்கு இந்தியர்கள் மீது அக்கறையா? பாண்டா கரடிகளின் மீது அக்கறையா? – சிவநேசன் கேள்வி

பழனிவேலுக்கு இந்தியர்கள் மீது அக்கறையா? பாண்டா கரடிகளின் மீது அக்கறையா? – சிவநேசன் கேள்வி

674
0
SHARE
Ad

Sivanesan-sliderசுங்கை, ஜூன் 10 – இந்திய சமுதாயம் குறித்த பல பிரச்சனைகள் இருக்க, அவற்றைப் பற்றியெல்லாம் எந்த ஒரு அறிக்கையும் விடாமல், கவனமும் செலுத்தாமல் பாண்டா கரடிகளைப் பற்றி மட்டும் அக்கறை செலுத்தும் ம.இ.கா தேசியத் தலைவரும் சுற்றுச் சூழல் அமைச்சருமான பழனிவேலுவின் போக்கு குறித்து பேராக் ஜசெக சட்டமன்ற உறுப்பினரான சிவநேசன் சாடியுள்ளார்.

பாண்டா கரடியை ஒரு மாதத்திற்கு இலவசமாக பொதுமக்கள் பார்வையிட அனுமதிகோரி அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவித்திருக்கும் பழனிவேல், இந்திரா காந்தி பிரச்சினையை அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படும் என ஏன் அறிவிக்கவில்லை என சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சிவநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“பழனிவேல் இந்திய சமுதாயத்தை விட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் இரண்டு பாண்டா கரடிகள் மீதுதான் அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தியர்களின் பிரச்சினைகளை அமைச்சரவையில் விவாதிப்பதைவிட மஇகாவின் தேசியத் தலைவரும் அமைச்சருமான டத்தோஸ்ரீ பழனிவேலுவுக்கு இந்த பாண்டா கரடிகள் மீதுதான் அதிக அக்கறை” என்றும் சிவநேசன் சுட்டிக்காட்டினார்.

#TamilSchoolmychoice

“பல நாட்களுக்குப் பிறகு இந்திராகாந்தி விவகாரத்தில் குழந்தையை தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பழனி கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஓர் அறிக்கை என்றாலும், இந்திய சமுதாயம் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. இந்தியர் பிரச்சினைகளை அமைச்சரவையில் விவாதிப்பதை விட பாண்டா கரடிகளை இலவசமாக கண்டுகளிப்பதற்கு முக்கியதுவம் அளிப்பது வேதனையாக இருக்கிறது” என்று சிவநேசன் தெரிவித்தார்.

உண்மையிலேயே பழனிக்கு இந்தியர்கள் மீது அக்கறையிருந்தால் நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திரா காந்தி பிரச்சினையை அங்கு கொண்டு செல்ல வேண்டும். அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதை மக்களுக்கு பழனி தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், பழனிவேல் மட்டுமின்றி அமைச்சரவையில் மஇகாவின் பிரதிநிதியாய் இருக்கும் டத்தோஸ்ரீ சுப்பிரமணியமும் இப்பிரச்சினையை அமைச்சரவைக்கு கொண்டு சென்று விவாதித்து தீர்வுகாண முயற்சிக்க வேண்டும் என சிவநேசன் வலியுறுத்தினார்.