இமாச்சலப் பிரதேசம், ஜூன் 11 – இமாச்சலப் பிரதேசத்தில் 24 மாணவர்களை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்ற காணொளிக் காட்சிகள் தற்போது டிவி 9 தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் வெளியாகியுள்ளன.
ஐதராபாத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 24 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட போது, மணாலி அருகே உள்ள பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஆற்றில் இறங்கி மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, லார்ஜி அணையிலிருந்து முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மாணவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.
ஆற்று வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டுள்ள மீட்புக் குழுவினர், எஞ்சிய மாணவர்களின் உடல்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நாளாக தொடரும் இந்த பணியில் ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
http://youtu.be/Ga0flzGpN1k