Home Featured இந்தியா இமாச்சல் பிரதேசத்தில் பேருந்து விபத்து  – 20 பேர் பலி!

இமாச்சல் பிரதேசத்தில் பேருந்து விபத்து  – 20 பேர் பலி!

681
0
SHARE
Ad

himசிம்லா –  இமாச்சல் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 20 பேர் பலியாகி உள்ளனர்.

himachal-pradeshஇமாச்சல் பிரதேசத்தின் ராம்பூர் என்ற இடத்தில் இருந்து, கின்னார் மாவட்டத்தின் ரெகோங் பியோ என்ற இடத்தை நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த அந்த பேருந்து, நாத்பா பகுதியை நெருங்கிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, 200 மீட்டர் பள்ளத்தில் உருண்டு சட்லெஜ் ஆற்றின் கரையில் விழுந்து நொறுங்கியது.

bus-accidentஇந்த கோர விபத்தில் 20 பேர் பலியாகினர். 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து உடனடியாக விசாரிக்கும் படி, அம்மாநில முதல்வர் வீர்பத்ர சிங்  உத்தரவிட்டுள்ளார்.