Home இந்தியா இமாச்சலில் பேருந்து கவிழ்ந்து 20 பயணிகள் பலி!

இமாச்சலில் பேருந்து கவிழ்ந்து 20 பயணிகள் பலி!

626
0
SHARE
Ad

bus-accident-ediசிம்லா, சென்னை 30 – இமாச்சலப் பிரதேச மலைச்சரிவில் நேற்று மதியம் நடந்த பேருந்து  விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேரின் நிலை  கவலைக்கிடமாக உள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மலை  வாசஸ்தலம் சிம்லா. இங்கிருந்து சாவேராகுந்த் என்ற இடத்துக்கு, 30  பயணிகளுடன் மாநில போக்குவரத்து கழக பேருந்து ஒன்று நேற்று  புறப்பட்டது.

இந்த பேருந்து பசந்த்பூர்-கின்கல் நெடுஞ்சாலையில் காதார்கட்  என்ற இடத்தின் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  மலைச்சரிவில் உருண்டு விழுந்தது. இந்த கோர விபத்தில் பயணிகளில்  20 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

#TamilSchoolmychoice

விபத்து  குறித்து அறிந்ததும், விரைந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணிகளில்   ஈடுபட்டனர். இதையடுத்து, விபத்து குறித்து சிம்லா துணை ஆணையர்  டீ.டபுள்யூ.நேகி கூறுகையில், ‘‘ இந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின்  உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

பேருந்து இடிபாடுகளின் அடியில் மேலும்  சிலரின் உடல் சிக்கியுள்ளது. மீட்கப்பட்ட  உடல்கள் பிரேத  பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

bus-accident-edi (1)மேலும், இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று  வருகிறது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 7  பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து நடந்தபோது பேருந்தில்  இருந்து குதித்துவிட்டதால், ஓட்டுனர் காயமின்றி உயிர் தப்பினார்.’’  என்றார்.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்து சிகிச்சை  பெற்றுவருபவர்களை சந்தித்த பிறகு முதல்வர் வீர்பத்ரா சிங்,  காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும்  செய்யும்படி இந்திரா காந்தி மருத்துவமனை நிர்வாகத்துக்கும், போர்கால  அடிப்படையில் மீட்புப் பணிகளில் ஈடுபட சிம்லா நகராட்சிக்கும்  உத்தரவிட்டுள்ளார்.