Home தொழில் நுட்பம் கூகுள் மீது புலனாய்வு விசாரணையை தொடங்கியது இந்தியா!

கூகுள் மீது புலனாய்வு விசாரணையை தொடங்கியது இந்தியா!

607
0
SHARE
Ad

google-campus-heroபுதுடெல்லி, ஜூலை 30 –  கூகுள் இணைய தளம் இந்தியாவில் சட்ட விரோதமாக வரைபட போட்டி நடத்தியதாகவும், அதன் மூலம் இந்திய இராணுவ ரகசியங்களை சட்டவிரோதமாகப் பதிவு செய்ததாகவும் கடந்த 2013-ம் ஆண்டு புகார் எழுந்தது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணையை இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ, தொடங்கி உள்ளது.

கூகுள் நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டு ‘மேப்பத்தான்’ (Mapathon) என்னும் பெயரில் நில வரைபட போட்டி ஒன்றை நடத்தியது. அதில் பங்கேற்றவர்கள் இந்தியாவின் இராணுவ மையங்கள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பாதுகாப்பு சம்பந்தமான ரகசிய இடங்களை பதிவு செய்ததாக இந்திய நில அளவை மையம், உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தது.

இது தொடர்பாக இந்திய நில அளவை மையம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“வரைபடப் போட்டி நடைபெறுவதற்கு முன்பதாக கூகுள் நிறுவனம் இந்திய அரசிடன் எவ்வித அனுமதியும் பெறவில்லை. மேலும், தேசிய வரைபட கொள்கை 2005-ன் படி நாட்டின் பரப்பளவை அளவிடவும் வரைபடம் தயாரிக்கவும் தனி நபர்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது. இந்த விதியினை கூகுள் மீறியுள்ளது” என்று கூறியுள்ளது.

மேலும் அந்த மையம், வரைபட போட்டியின் போது இந்தியாவின் இராணுவ பயிற்சி மையங்கள், அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட தடை விதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து தகவல்களை அளிக்குமாறு போட்டியாளர்களிடன் கூகுள் கேட்டுக்கொண்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.

நில அளவை மையம் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி காவல் துறையினர் விசாரணையைத் துவக்கிய நிலையில் இந்திய நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால் இவ்வழக்கை மத்திய புலனாய்வு அமைப்புக்கு இந்திய உள்துறை அமைச்சகம் மாற்றியது குறிப்பிடத்தக்கது.