Home கலை உலகம் நான் பேயை நம்புகிறேன்–அஞ்சலி!

நான் பேயை நம்புகிறேன்–அஞ்சலி!

846
0
SHARE
Ad

AnjaliIndexசென்னை, ஜூலை 30 – நான் பேயை நம்புகிறேன். நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போகும் நபர்கள் ஆவியாக உலா வருவார்கள் என்பது உண்மைதான் என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் தயாராகும் ‘கீதாஞ்சலி’ படத்தில் அஞ்சலி நடிக்கிறார். இது ஆவிகளைப் பற்றிய கதை. அப்படியெனில் அஞ்சலிக்கும் பேய் நம்பிக்கை உண்டா…? என்று கேட்டதற்கு அஞ்சலி கூறுகையில், “உண்டு. எனக்குப் பேய் நம்பிக்கை ரொம்பவே உண்டு.

நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போகிறவர்கள் ஆவியாக மாறுகிறார்கள். தனது நட்சத்திரத்தில் பிறந்தவர்களைத் தேடி பிடித்து பேய்கள் பயமுறுத்தும் என்பது உண்மைதான். அதே நேரம் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை பேயால் ஒன்றுமே செய்ய முடியாது.

#TamilSchoolmychoice

சாமி ஆஞ்சநேயரை கும்பிட்டால் பேய் தொல்லை இருக்காது என்பது நம்பிக்கை. சிறு வயதில் இருட்டை பார்த்து பயந்து இருக்கிறேன். ஏதோ உருவம் இருட்டில் நடந்து போவதை பார்த்து இருக்கிறேன்.

Anjali (1)வளர்ந்த பிறகு அப்படியெல்லாம் பார்க்கவில்லை. ஆனால் பேய் பிடித்தவர்களை பார்த்து இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை பேய் இருக்கிறது. பேயால் பாதிப்பும் நிறைய உள்ளது,” என்றார்.

அஞ்சலி இப்போது தமிழில் நடிக்க ஆரம்பித்துள்ளார். “மதகஜராஜா” படத்துக்குப் பிறகு தமிழில் அவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரே தொல்லை இப்போதைக்கு இயக்குநர் மு களஞ்சியம்தான்.

அவரது ஊர் சுற்றிப் புராணத்தில் சில காட்சிகள் மட்டும் நடித்துவிட்டால், பிரச்சனை தீர்ந்துவிடும் என்பதால், அந்தப் படத்தில் அஞ்சலியை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.