Home உலகம் பிற நாடுகளின் உள்விவகாரங்களுக்கு ஐ.நா.படையை பயன்படுத்தக் கூடாது – இந்தியா வலியுறுத்தல்!

பிற நாடுகளின் உள்விவகாரங்களுக்கு ஐ.நா.படையை பயன்படுத்தக் கூடாது – இந்தியா வலியுறுத்தல்!

721
0
SHARE
Ad

india1நியூயார்க், ஜூலை 30 – பிற நாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் ஐ.நா. அமைதிப்படை தலையிடுவது, அந்நாடுகளில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தாது என இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

ஐ.நா.பாதுகாப்புப் படைக்கு அதிக அளவு வீரர்களை அனுப்பும் நாடுகளில் மிக முக்கிய நாடு இந்தியா. இதுவரை 1.7 லட்சம் வீரர்களை பிற நாடுகளில் அமைதியை நிலைநாட்ட, ஐ.நா. அமைதி படைக்கு இந்தியா அனுப்பியுள்ளது. உலகெங்கும் பல நாடுகளில் நடைபெற்ற 69 அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கையில் 43-ல் இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

அண்டைநாடுகளுடன் ஏற்பட்ட போர், தீவிரவாதிகளினால் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றிற்காக ஏற்படுத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புப் படை, தற்போது பிற நாடுகளில் நடைபெறும் உள்நாட்டுப் போர்களுக்கும், போராட்டங்களுக்காகவும் பயன்படுத்துவது அதிகரித்து வருகின்றது.

#TamilSchoolmychoice

இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் கூட்டத்தில் ஐ.நா விற்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி கூறியதாவது:- “பிற நாடுகளின் உள்நாட்டு சண்டைகளில் ஐ.நா. பாதுகாப்புப் படையை பயன்படுத்துவது, அந்நாடுகளில் நிரந்தர தீர்வை தராது.

united-nationsநாம் இதே போன்ற விவகாரங்களில் ஐ.நா. படையை அனுப்புவதால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வுகான ஐ.நா. படை அனுப்பப்படுவதால், அவர்களுக்கு உள்ளூர் அமைப்புகளால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் படையினரின் வலிமையும் இதுபோன்ற நடவடிக்கைகளால் குறையும்.

எனவே, படையை அனுப்புவது குறித்து புதிய செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்.” “பாதுகாப்புப் படையில் உள்ள உறுப்பு நாடுகளுடன் விவாதித்து இதனை செயல்படுத்த வேண்டும். அமைதிப் படையை கோருவதற்கு முன்பு, தங்கள் மண்டலத்தில் உள்ள அமைப்புகளின் உதவி உள்ளிட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அமைதிப் படையை பயன்படுத்துவதென்பது, கடைசி வாய்ப்பாகவே இருக்க வேண்டும். தற்போது அமைதிப் படையை பல பணிகளுக்கு பயன்படுத்துவதால், அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கின்றன” என்று ஐ.நா விற்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி கூறியுள்ளார்.