Home உலகம் ஈராக் வான்வெளியில்இனி எமிரேட்ஸ் விமானங்கள் பறக்காது!

ஈராக் வான்வெளியில்இனி எமிரேட்ஸ் விமானங்கள் பறக்காது!

638
0
SHARE
Ad

Emirates-Airbus

துபாய், ஜூலை 30 – மத்திய கிழக்கு நாடுகளின் முன்னணி விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், ஈராக் வான்வெளியில் பறப்பதை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 17-ம் தேதி மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 17, கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

#TamilSchoolmychoice

விமானப் பணியாளர்கள் உட்பட 298 பேர் பலியான இந்த சம்பவம் உலக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக விமான நிறுவனங்கள் பாதுகாப்பு கருதி தங்கள் வான்வெளிப்பாதைகளை மறு ஆய்வு செய்துவருகின்றன.

இந்நிலையில், தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் முழுவதுமாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வரும் ஈராக்கின் வான்வெளி பாதைகளை தவிர்த்து மாற்றுப்பாதைகளில் செல்ல எமிரேட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

விரைவில் அதற்கான மாற்றுவழிகள் கண்டறியப்படும் என்றும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

எனினும், இந்த மாற்றுப் பாதைகளை நடைமுறைப்படுத்த சில காலம் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உலக அளவில் விமான சேவை மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆராய,, உலக விமான சேவை மையத்தின் ஆலோசனைக் கூட்டம் கனடாவின் மாண்ட்ரியல் நகரில் நடைபெற உள்ள நிலையில், எமிரேட்ஸின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.