Home Featured வணிகம் ரிங்கிட் வீழ்ச்சி நாட்டின் அடிப்படை பொருளாதாரத்தை பிரதிபலிக்கவில்லை: வாஹிட்

ரிங்கிட் வீழ்ச்சி நாட்டின் அடிப்படை பொருளாதாரத்தை பிரதிபலிக்கவில்லை: வாஹிட்

572
0
SHARE
Ad

WAHIDOMARகோலாலம்பூர் – ரிங்கிட் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து இருக்கும் இந்த வேளையில், ரிங்கிட்டின் தற்போதய சரிவு நாட்டின் அடிப்படையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் வாஹிட் ஓமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வாஹிட் அளித்துள்ள விளக்க அறிக்கையில், “யுவான் (சீனா நாணயம்) மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி, உலக சந்தைகளில் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்கத்தில் இருந்து மலேசியாவும் தப்பவில்லை. இந்த சூழலில் நாம் அடிப்படை பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போதய சூழலிலும் வர்த்தக உபரி அதிகமாகத்தான் உள்ளது. விரைவில் இது நடப்பு கணக்குகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.”

“அதுவரை நாம் நமது பணியை தொடர வேண்டும். புதிய பொருளாதார கொள்கைகள் பற்றிய அறிவிப்பினை பிரதமர் அறிவிப்பார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சரிவை சந்தித்துள்ள நாட்டின் பொருளாதார நிலையை சீர் செய்ய, ஓமார் தலைமையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் , 10 வல்லுனர்கள் அடங்கிய சிறப்பு பொருளாதார குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.