Home Featured வணிகம் முன்னாள் அமைச்சர் வாஹிட் ஒமார் ‘பிஎன்பி’ நிர்வாகத் தலைவராகலாம்!

முன்னாள் அமைச்சர் வாஹிட் ஒமார் ‘பிஎன்பி’ நிர்வாகத் தலைவராகலாம்!

815
0
SHARE
Ad

கோலாலம்பூர் -முன்னாள் அமைச்சரும், மலாயன் வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான டான்ஸ்ரீ வாஹிட் ஒமார் (படம்) பிஎன்பி எனப்படும் பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் எனப்படும் தேசிய பூமிபுத்ரா முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Abdul Wahid Omarபிஎன்பி நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக அதிகாரமற்ற தலைவராக (Non-Executive Chairman) டான்ஸ்ரீ அகமட் சார்ஜி அப்துல் ஹாமிட் செயல்பட்டு வருகின்றார். முன்னாள் அரசாங்கத் தலைமைச் செயலாளரான 77 வயது அகமட் சார்ஜி 1996 முதல் இந்தப் பதவியை வகித்து வருகின்றார்.

பிஎன்பி நிறுவனத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாகச் செயல்முறை அதிகாரியாகவும்  (President and Group CEO) டான்ஸ்ரீ அகமட் காமா பியா செயல்பட்டு வருகின்றார். இவருக்கு வயது 65 ஆகும்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இந்த இருவரும் தங்களின் பதவியிலிருந்து விலகிக் கொள்வார்கள் என்றும் அவர்களுக்குப் பதிலாக நிர்வாக அதிகாரங்களோடு வாஹிட் ஒமார் தலைவராகப் பதவி ஏற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுபவம் மிக்க வாஹிட்டின் புதிய நியமனத்தால் இந்த முதலீட்டு நிதி பெரும் மாற்றங்களை அடையும் என்றும், வணிக ரீதியாக பல முன்னேற்றங்களைக் காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.