Home இந்தியா உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை காண மோடிக்கு பிரேசில் அழைப்பு!

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை காண மோடிக்கு பிரேசில் அழைப்பு!

438
0
SHARE
Ad

footballபுதுடெல்லி,  ஜூன் 17 – பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், பிரிக்ஸ் மாநாடு பிரேசிலின் போர்டலிசா நகரில் அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடக்க உள்ளது.

இதற்கு முன்பாக, ஜூலை 13-ஆம் தேதி உலககோப்பை கால்பந்து இறுதிப் போட்டி ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கிறது. இந்த போட்டியை நேரில் காண பிரதமர் மோடி உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு பிரேசில் அழைப்பு விடுத்துள்ளது.

worldcup_footballஇத்தகவலை டெல்லியில் உள்ள பிரேசில் தூதரக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். உலக கோப்பை கால்பந்து தொடரை ஒட்டி, நினைவு தபால் தலையை மோடி கடந்த வாரம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.