Home உலகம் பாகிஸ்தானுக்கு செல்லும் ஹாங் காங்கின் கேத்தே பசிஃபிக் விமான சேவை ரத்து!

பாகிஸ்தானுக்கு செல்லும் ஹாங் காங்கின் கேத்தே பசிஃபிக் விமான சேவை ரத்து!

494
0
SHARE
Ad

Cathay-Pacific-Airlines-Wallpapers-14ஜூன் 18 – ஹாங் காங்கின் கேத்தே பசிஃபிக் ஏர்லைன்ஸ் நிறுவனம் பாகிஸ்தானுக்கான சர்வதேச விமான சேவையினை நிறுத்தியுள்ளது.

இது குறித்து கேத்தே பசிஃபிக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் சொஹைல் யுநெஸ் கூறுகையில், “வர்த்தக ரீதியான காரணங்களுக்காகவே பாகிஸ்தானில் விமான சேவை நிறுத்தப்படுகின்றது.இந்த தடை தற்காலிகமானது. விரைவில் சாதகமான சூழல் திரும்பும் என எதிர்பார்க்கின்றோம்” என்று கூறியுள்ளார்.

வர்த்தக காரணங்களுக்காக விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவித்தாலும், பாகிஸ்தானில் கடந்த வாரம், கராச்சியில் உள்ள ஜின்னா விமான நிலையத்தில் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

#TamilSchoolmychoice

சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பினையும் மீறி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், சர்வதேச நிறுவனங்கள் பாகிஸ்தானில் விமான சேவையினை தொடர்வது குறித்து அச்சம் தெரிவித்தன.

இதன் காரணமாகவே கேத்தே பசிஃபிக் ஏர்லைன்ஸ் தங்கள் விமான சேவையை நிறுத்தியுள்ளது என கூறப்படுகின்றது. இது பாகிஸ்தானுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

கேத்தே பசிஃபிக் போன்றே மற்ற சர்வதேச விமான நிறுவனங்களான பிரிட்டிஷ் ஏர்வேஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்களும் இதே முடிவினை எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.