Home கலை உலகம் தோல்வியடைந்ததால் அரசியலை விட்டு ஓடமாட்டேன் – ரம்யா!

தோல்வியடைந்ததால் அரசியலை விட்டு ஓடமாட்டேன் – ரம்யா!

578
0
SHARE
Ad

Ramya,சென்னை, ஜூன் 18 – தமிழில் பொல்லாதவன், வாரணம் ஆயிரம், குத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் ரம்யா. கன்னடத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2009- ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் மாண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினார். நடிப்பதையும் குறைத்தார்.

அதன் பிறகு கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட ரம்யாவுக்கு வாய்ப்பு கிட்டியது. ஆனால் அவர் தோல்வியடைந்தார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து மாண்டியாவில் வசித்த வாடகை வீட்டை காலி செய்து விட்டு பெங்களூர் வீட்டுக்கு குடிபெயர்ந்தார். இதனை எதிர் கட்சிகள் விமர்சித்தன தேர்தலில் தோற்றதால் தொகுதியை காலி செய்து விட்டு ஓடிவிட்டார் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கிண்டல் செய்தது. இதற்கு ரம்யா பதில் அளித்துள்ளார்.

Ramyaஅவர் கூறியதாவது, “வாடகை பிரச்சனை காரணமாகத்தான் மாண்டியாவில் நான் வசித்த வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூர் சென்றேன். தற்போது இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து மீண்டும் மாண்டியா தொகுதியிலேயே குடியேறி இருக்கிறேன்.

தோல்வியடைந்ததால் நான் அரசியலை விட்டோ தொகுதியை விட்டோ ஓடமாட்டேன். தொடர்ந்து மக்களுக்கு தொண்டு செய்வேன். எனக்கு எதிராக சிலர் பொய்யான வதந்திகளை பரப்புகிறார்கள் என நடிகை ரம்யா கூறினார்.