Home இந்தியா ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடுகிறார் – கர்நாடகா முதல்வர் காட்டம்!

ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடுகிறார் – கர்நாடகா முதல்வர் காட்டம்!

502
0
SHARE
Ad

siddharamiah ,பெங்களூரு, ஜூன் 18 – தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா காவிரி நதிநீர் பிரச்சனையின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற அரசு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது,“காவிரி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் நிலுவையில் இருக்கும் நிலையில் காவிரி மேலாண்மைக் குழுவை அமைப்பது தொடர்பாக மத்திய அரசை நிர்பந்திக்கும் வகையில் ஜெயலலிதா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில், காவிரி படுகை பகுதியில் உள்ள கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தனது அரசு போராடும் என்று உறுதியளித்தார்.

#TamilSchoolmychoice

காவிரி விவகாரத்தை பரஸ்பர பேச்சுவார்த்தைகளின் வாயிலாக தீர்த்துக் கொள்வதற்கு பதிலாக பிரச்சனையை அரசியலாக்குவதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

அமேலும், காவிரி தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் கர்நாடகத்துக்கு நீதி கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.