Home கலை உலகம் ரம்யாவை கடத்தி கட்டாய திருமணம்-கன்னட நடிகர் பதாகை ஒட்டினார்!

ரம்யாவை கடத்தி கட்டாய திருமணம்-கன்னட நடிகர் பதாகை ஒட்டினார்!

916
0
SHARE
Ad

tamil-actress-actress-ramya-new-images08சென்னை, பிப் 22 – ரம்யாவை கடத்தி கட்டாய திருமணம் செய்து கொள்ள போவதாக கன்னட நடிகர் போஸ்டர் அடித்து ஒட்டியதால் காவல்துரை அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் மீது கிரிமினல் சட்டம் பாய்கிறது. வித்தியாசமாக விளம்பரம் செய்கிறோம் என்று சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பிரச்னையில் சிக்கி கொள்கின்றனர்.

நடிகையை ஹீரோ பின்னால் நாய் போல் அலைவதாக ஒட்டிய தெலுங்கு பட சினிமா போஸ்டர் பிரச்னைக்கு உள்ளானது. அந்த பாணியில் தற்போது மற்றொரு பிரச்னை எழுந்துள்ளது.

வாரணம் ஆயிரம், குத்து உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரம்யா. இவர் கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் தேர்வானார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. கன்னட நடிகரும், இயக்குனருமான வெங்கட் என்பவர் அந்த போஸ்டர்களை ஒட்டியதாக தெரிகிறது.

ஹச்சா வெங்கட் (பைத்திய வெங்கட்) என்ற தலைப்பில் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரில், ரம்யா என்னுடைய உணர்வுகளை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய்.

என் காதலை நீ ஏற்றுக் கொள்கிறாயோ இல்லையோ? எனக்கு தெரியாது. ஆனால் அடுத்த வாரம் உன்னை கடத்தி சென்று பனாசங்கரி கோயிலில் தாலி கட்ட போகிறேன்.

இதை தடுக்க யாருக்கு துணிச்சல் இருக்கிறது என்று பார்த்து விடுகிறேன் என்று வாசகம் இடம்பெற்றிருந்தது. மேலும் ரம்யாவின் அம்மா பெயரும், வெங்கட்டின் பெற்றோர் பெயரும் அதில் அச்சிடப்பட்டிருந்தது.

இந்த போஸ்டர் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா அரத்கர் கூறும் போது, அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

இதுபற்றி ரம்யா தரப்பில் புகார் தந்தாலும், தராவிட்டாலும் சம்பந்தப்பட்ட நடிகர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.