லண்டன், ஜூன் 18 – சீன பிரதமர் லீ கெகியாங் மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றார். கடந்த ஆண்டு பிரதமர் பதவி ஏற்ற பின் அவர் பிரட்டன் செல்வது இது முதல் முறை.
பிரிட்டனின் அணுசக்தி, உள்கட்டமைப்பு போன்ற துறைகள் குறித்து இங்கிலாந்து பிரதமருடன் விவாதிக்கப்பட்டு, இரு நாடுகளுக்கிடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், லீ கெகியாங் இங்கிலாந்து ராணியை சந்தித்த பின் அங்குள்ள உள்ள சீன வணிகத்தலைவர்களை சந்திப்பார் என்று கூறப்படுகின்றது.
கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் திபெத்தியர்களின் தலைவரான தலாய் லாமாவை தனியே சந்தித்துப் பேசியது, இரு நாடுகளின் உறவினை சீர்குலைத்தது. எனினும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது இந்தப் பிரச்சனை விலகத் தொடங்கியது.