Home வணிகம்/தொழில் நுட்பம் வர்த்தகத்திற்கு ஏற்ற நாடுகளின் தரவரிசை:19-வது இடத்தில் மலேசியா!

வர்த்தகத்திற்கு ஏற்ற நாடுகளின் தரவரிசை:19-வது இடத்தில் மலேசியா!

499
0
SHARE
Ad
09

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 18 – வர்த்தகம் செய்ய சிறந்த நாடுகளாக கருதப்படும் 82 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் மலேசியாவிற்கு 19 -வது இடம் கிடைத்துள்ளது.

2014 -ம் ஆண்டு முதல் 2018 -ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வர்த்தகம் செய்ய ஏதுவான 20 நட்பு நாடுகளின் பட்டியலிலும் மலேசியா இடம் பிடித்துள்ளது.

இந்த தகவல், ‘தி இக்னாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட்’ (இஐயூ) அண்மையில் வெளியிட்ட வர்த்தகச் சூழ்நிலை தரவரிசை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 2009 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில், 24 -வது இடத்தில் இருந்து மலேசியா, தற்போது 5 இடங்கள் முன்னேறி, பிரிட்டிஷ் கூட்டரசு, பிரான்ஸ், தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளியது. எனினும், நாடுகளுக்கான பிராந்திய தரவரிசையில், ஏற்கனவே இருந்த 6 வது இடத்திலேயே மலேசியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்டை நாடான சிங்கப்பூர், கடந்த 2009 – 2013 -ம் ஆண்டில் இருந்த முதலிடத்தை, மீண்டும் தக்க வைத்துள்ளது. அத்துடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்நிய முதலீட்டிற்கு சிறந்த இடமாகவும் சிங்கப்பூர் தொடர்ந்து விளங்கும் என்றும் கருதப்படுகின்றது.