Home இந்தியா விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் மோடி ஆலோசனை!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் மோடி ஆலோசனை!

558
0
SHARE
Ad

narendra-modiடெல்லி, ஜூன்19 – விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக, பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. ஈராக்கில் உள்நாட்டு போர் நடப்பதால், கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது.

இந்நிலையில், விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கூட்டினார்.

modiஅந்த கூட்டத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, மத்திய உரத்துறை அமைச்சர் அனந்த குமார், மத்திய உணவு, சிவில் சப்ளை துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

இந்த கூட்டத்தில், பண வீக்கத்தை சமாளிப்பதற்கான வியூகம் வகுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், பருவமழை தவறினால் ஏற்படும் நிலைமையை சமாளிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.