Home உலகம் ஈராக் போர்: 39 இந்தியர்களை தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டதாக தகவலா?

ஈராக் போர்: 39 இந்தியர்களை தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டதாக தகவலா?

936
0
SHARE
Ad

iraq,ஈராக், ஜூன் 19 – ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் கொல்லப்பட்டு விட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்நாட்டுப்போர் உச்சக்ட்டத்தை எட்டியுள்ள ஈராக்கில், கேரளாவில் உள்ள 40 செவிலியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

அவர்களில் மொசூல் நகரில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி கொண்டிருந்த, இந்தியர்கள் 40 பேரை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இதனை மத்திய அரசும் உறுதிபடுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

இதனை அடுத்து கடத்தபட்டவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

iraq1கடத்தப்பட்ட இந்தியர்கள் பணிபுரிந்த அதே கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த வங்கதேசத்ததை சேர்ந்த ஜமால்கான் என்ற ஊழியர் இந்த தகவலை கூறியுள்ளார்.

மொசூல் நகரம் தீவிரவாதிகள் கட்டுபாட்டுக்குள் வந்தததை அடுத்து வங்கதேசத்தை சேர்ந்த 53 ஊழியர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 40 பேரை மருத்துமனை ஒனறில் கட்டுமான நிறுவனம் தங்க வைத்ததாக ஜமால் கூறியுள்ளார்.

பின்னர் எர்ஃபில் நகருக்கு தப்பிச் செல்லும் வழியில் 39 இந்தியர்களை கொன்றுவிட்டதாக ஹர்கித் என்ற ஊழியர் கூறியதாகவும் ஜமால்கான் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை மத்திய அரசு அதிகாரிகள் உறுதிபடுத்த மறுத்துள்ள நிலையில் கடத்தபட்டவர்கள் நலமுடன் இருப்பதாக அவர்களது உறவினர்களும் கூறியுள்ளனர்.