Home நாடு சீனர்களை விமர்சித்த இஸ்மா தலைவர் மீது தேச நிந்தனை குற்றச்சாட்டு!

சீனர்களை விமர்சித்த இஸ்மா தலைவர் மீது தேச நிந்தனை குற்றச்சாட்டு!

523
0
SHARE
Ad

காஜாங், ஜூன் 20 – இந்நாட்டில் உள்ள சீனர்கள் அத்துமீறி நுழைந்தவர்கள் என்று நிந்திக்கும் வகையில் இஸ்மா வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்ட காரணத்திற்காக இஸ்மா எனப்படும் மலேசியா இக்காத்தான் முஸ்லிம் அமைப்பின் தலைவர் அப்துல்லா ஸைக் அப்துல் ரஹ்மான் மீது நேற்று காஜாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மே 6ஆம் தேதி பாங்கியிலுள்ள இஸ்மா தலைமைக் கட்டடத்தில் அவர் இந்த வார்த்தைகளை பயன்படுத்தினார் என்று 1948 -ம் ஆண்டுக்கான தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 3 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க சட்ட விதி உள்ளது. குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய அப்துல் ஷேக்கிற்கு 5 ஆயிரம் வெள்ளி ஜாமின் கொடுக்கப்படுகிறது என்று நீதிபதி கூறினார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இஸ்மாவின் தலைவராக இருக்கும் அப்துல்லா தாம் செய்யும் பணியின் மூலம் கிடைக்கும் நிதியுதவியில் வருமானம் பெற்று வருகிறார். அவரது மனைவி இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.