Home உலகம் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிடும் புத்த பிட்சு!

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிடும் புத்த பிட்சு!

702
0
SHARE
Ad

BUTHA BIDSUகொழும்பு, ஜூன் 21 – மூன்றாம் முறையாக இலங்கை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து புத்த பிட்சு ஒருவர் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிடத் துணிந்த இந்தப் புத்தத் துறவியின் பெயர் மதுலவாவே சோபிதா. இவர் அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க தான் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.

அதிபர் ராஜபக்சே 2015-ம் ஆண்டு தொடக்கத்தில் தேர்தலை நடத்தவிருப்பதாக இலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் போதுபல சேனை என்ற பவுத்த அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு வரும் தருணத்தில் புத்த பிட்சுவின் இந்த அறிவிப்பு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே போதுபல சேனை அமைப்புக்கு எதிராக புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்த முயன்றதாகக் கருதப்பட்ட புத்தத் துறவி ஒருவர் தாக்கப்பட்டு சாலையோரத்தில் வீசியெறியப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், எதிர் அமைப்பு தொடங்கக்கூடாது என்று அவரை வலியுறுத்தி தனது அறிவிப்பை திறம்ப பெறவும் வைத்துவிட்டதாக போதுபல சேனை அமைப்பு மீது குற்றம் சாட்டப்படுகின்றது.