Home நாடு அமைச்சரவை மாற்றம் உறுதி – நஜிப் சூசக அறிவிப்பு

அமைச்சரவை மாற்றம் உறுதி – நஜிப் சூசக அறிவிப்பு

522
0
SHARE
Ad

20140122_Najib-Razak_reutersகோலாலம்பூர், ஜூன் 25 – வெகு விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழும் சாத்தியம் இருப்பதை உறுதிபடுத்தும் வகையில் சூசக அறிவிப்பு ஒன்றை பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது விமான நிலையத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றிய அவர்,“இந்த முக்கியமான நிகழ்வில் ஹிஷாமுடின் துன் ஹுசேன் ஓன் இடைக்கால போக்குவரத்து அமைச்சராக பணியாற்றுவது இதுவே கடைசி முறையாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

இதன்மூலம் தற்போது இடைக்கால போக்குவரத்து அமைச்சராக பணியாற்றி வரும் ஹிஷாமுடின் இனி அந்தப் பதவியில் நீடிக்கமாட்டர் என்பது உறுதியாகிவிட்டது.

#TamilSchoolmychoice

நேற்று நடைபெற்ற இரண்டாவது விமான நிலைய திறப்பு விழாவில் ஹிஷாமுடினும் கலந்து கொண்டார்.

மசீச சார்பில் போக்குவரத்து அமைச்சரா?

பாரம்பரியமாக மசீசவை சேர்ந்த ஒருவரே போக்குவரத்து அமைச்சராக இருப்பார் என்பதால் நிகழவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் மசீசவைச் சேர்ந்த ஒருவர் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்படுவார் என்பது உறுதியாக தெரிகிறது.

பிரதமரின் இந்த அறிவிப்பின் மூலம் கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றம் இந்த வாரமே நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.