Home நாடு கூலிம் விமான நிலையம் 1.6 பில்லியன் ரிங்கிட் செலவில் உருவாக்கம்!

கூலிம் விமான நிலையம் 1.6 பில்லியன் ரிங்கிட் செலவில் உருவாக்கம்!

677
0
SHARE
Ad

Kulim Airportகூலிம், ஜூன் 25 – உத்தேச திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள கெடாவில் உள்ள கூலிம் நகரில் அமைக்கப்படவிருக்கும் விமான நிலையம் வட மாநிலங்களுக்கான சேவை மையமாக திகழும் என்பதுடன் அதனை கட்டி முடிக்க ஏறத்தாழ 1.6 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் கூறியுள்ளார்.

நிலத்தை கையகப்படுத்தும் செலவு, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விமான நிலையம் ஓடு பாதைகள் ஆகியவற்றிருக்கான செலவினங்களும் இதில் அடங்கும்.

அடுத்து வரும் 2 ஆண்டுகளில் பினாங்கிலுள்ள பாயான் லெப்பாஸ் விமான நிலையம் உச்சகட்ட கொள்ளளவை அடைந்துவிடும் என்பதால் வட மாநில பிரதேசங்களுக்கான விமான நிலையம் அமைக்கப்படுவது அவசியம் என்று முக்ரிஸ் கருத்துரைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

பினாங்கு மாநிலத்திலுள்ள விமான நிலையத்தில் உள்ள ஓடு பாதை ஒரு வழி ஓடு பாதை என்பதால் இதனை அதிகமான விமானங்கள் பயன்படுத்தும் சூழ்நிலை இருந்து வருகிறது. மிகத் துரிதமாக வளர்ச்சி கண்டு வரும் வட மாநில பிரதேசங்களுக்கு வான் வழி சரக்கு அனுப்பும் வசதிகளும் சேவைகளும் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றும் கெடா மந்திரி பெசாரான முக்ரிஸ் மகாதீர் கூறியுள்ளார்.