Home உலகம் பருவ நிலை மாற்றம்: அடுத்த பத்து ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும்!

பருவ நிலை மாற்றம்: அடுத்த பத்து ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும்!

763
0
SHARE
Ad

climate-changeநியூயார்க், ஜூன் 27 – நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கும் பருவ நிலை, அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் இயற்கையை மட்டும் அல்லாமல் உலக பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நியூயார்க் மேயர் மைகேல் ப்ளூம்பெர்க், சுற்றுச் சூழல் ஆர்வலர் டோம் ஸ்டேயெர் மற்றும் முன்னாள்  கருவூல அதிகாரி ஹென்றி பால்சன் ஆகியோர் கூறுகையில், “அடுத்த 20 ஆண்டுகளில் பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஏற்படும் விளைவுகளை சந்திக்க பல பில்லியன் டாலர்கள் செலவிட நேரிடும்” என்று கூறியுள்ளனர்.

இந்த பருவ நிலை மாற்றம், விவசாயம் தொடங்கி கட்டுமான தொழில் வரை பெரும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இதன் காரணமாக 2050-ம் ஆண்டு 106 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான கடலோர பகுதிகள் கடல் மட்டத்திற்கு செண்டு விடும் என்றும், அதிக வெப்பம் காரணமாக பயிர் விளைச்சல் 70 சதவீதம் அளவுக்கு குறைந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த ஆய்வுகளின் முடிவில், சர்வதேச தொழில் சார்ந்த அமைப்புகள் பருவ நிலை மாற்றம் பற்றிய சரியான விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளும் தருணம் இதுவாகும். வர்த்தகத்தில் பருவ நிலை பாதிக்கா வண்ணம் புதிய முயற்சிகளைப் புகுத்துதல், முதலீட்டாளர்கள் பருவ நிலை மாற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்புடன் இருத்தல் போன்ற செயல்முறைகளை கடைபிடிப்பதன் மூலமாகவே எதிர்கால விளைவுகளை எதிர்கொள்ள முடியும் என்று தெரிய வருகின்றது.