Home கலை உலகம் பிரபல தமிழ் நடிகர் தற்கொலை!

பிரபல தமிழ் நடிகர் தற்கொலை!

606
0
SHARE
Ad

1463885_10200501595456189_1432967173_nசென்னை, ஜூன் 27 – தென்றல் தொடர் நாடகத்தில் நடித்தவரும், ரெண்டு, பாய்ஸ் ஆகிய படங்களில் நடித்தவருமான பிரபல நடிகர் பாலமுரளி மோகன் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நடிகர் பாலமுரளி மோகன். (புதன்கிழமை) இரவு 10 மணிக்கு வெளியேசென்று விட்டு வீட்டுக்கு வந்தார். நேற்று (வியாழக்கிழமை) காலை அவரது படுக்கை அறையை குடும்பத்தினர் தட்டிய போது கதவு திறக்கவில்லை.

பின்னர் ஜன்னல் வழியாக அவரது குடும்பத்தினர் பார்த்த போதுபால முரளி மோகன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

மரணம் அடைந்த பாலமுரளி மோகனுக்கு சீதாராணி என்ற மனைவியும்உமாசங்கர் என்ற மகனும் உள்ளனர். உமாசங்கர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.