Home நாடு செல்லியல் செய்தி ‘தமிழ்மலர்’ நாளிதழில் மறு பிரசுரம்!

செல்லியல் செய்தி ‘தமிழ்மலர்’ நாளிதழில் மறு பிரசுரம்!

622
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 30 – இணையத் தளத்திலும் மற்றும் செல்பேசித் தளங்களில், செயலிகள் ஊடாகவும்  (mobile app) வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும், செல்லியல் தகவல் ஊடகத்தின் பிரத்தியேகச் செய்திகள், அப்படியே எடுத்தாளப்பட்டு, மலேசியாவில் வெளியிடப்படும் அச்சு வடிவ நாளிதழ்களில், மறு பிரசுரமாக வெளியிடப்பட்டு வருகின்றன என்பதை பல தருணங்களில் நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை, ஜூன் 23 ஆம் தேதி நமது செல்லியலுக்கென  பிரத்தியேகமாக எழுதி வெளியிடப்பட்ட, கீழ்க்காணும் செய்தி அப்படியே எடுத்தாளப்பட்டு, கடந்த  ஜூன் 28  -ம் தேதியிட்ட ‘தமிழ்மலர்’ நாளிதழில் அப்படியே மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளதைக் காணலாம்.

Selliyal

#TamilSchoolmychoice

(செல்லியல் இணையத்தளத்தில் 23 ஜூன் அன்று வெளியிடப்பட்ட செய்தி)

Tamil Malar

(தமிழ்மலர் நாளிதழில் 28 ஜூன் அன்று வெளியிடப்பட்ட செல்லியல் செய்தி)