Home நாடு இன்றைய ‘தமிழ்மலர்’ நாளிதழில் செல்லியலின் வணிக செய்திகள்!

இன்றைய ‘தமிழ்மலர்’ நாளிதழில் செல்லியலின் வணிக செய்திகள்!

966
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 16 – நமது செல்லியலில் சிறப்பு அம்சமாக இடம் பெறுவது தொழில் நுட்பம் மற்றும் வணிகப் பிரிவில் இடம் பெறும் செய்திகளாகும்.

நவீன தொழில் நுட்ப யுகத்தில் குறிப்பாக தொலைத் தொடர்புத் துறையிலும், அதனை சார்ந்த வணிகத்துறையிலும் தினமும் புதுப் புதுச் செய்திகள் வெளிவருகின்றன. இவற்றை வாசகர்களுக்குப் பயன்படும் வண்ணம் உலக அளவில் பல்வேறு செய்தித் தளங்களிலிருந்து சேகரித்து அவற்றை தமிழில் தொகுத்து செல்லியலில் பிரசுரித்து வருகின்றோம்.

ஆனால் நமது இணையத் தள வாசகர்களை மட்டும் கவரும் இந்த செய்திகள் அச்சின் வழி வெளியாகும் தமிழ்ப் பத்திரிக்கைகளின் வாசகர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கில், இந்த செய்திகளை மறுநாள் மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கைகள் அப்படியே மறுபிரசுரம் செய்து தங்களின் பத்திரிக்கைகளில் வெளியிடுகின்றன.

#TamilSchoolmychoice

நமது இணையத் தளத்தின் மூலமாகவும், செல்லியல் செயலியின் மூலமாக கைத்தொலைபேசிகளிலும் நமது செய்திகளைப் படிக்க முடியாத வாசகர்களுக்கு அச்சுப் பிரசுரங்களின் வழி வெளியாகும் தமிழ்ப் பத்திரிக்கைகளின் வழி நமது செய்திகள் இதன் மூலம் சென்று சேர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இன்றைய தமிழ்மலர் நாளிதழில், கடந்த வாரம் ஜூன் 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் செல்லியல் வணிகப் பிரிவில் வெளியிடப்பட்ட 5 செய்திகள் தலைப்பு மட்டும் மாற்றப்பட்டு அப்படியே மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்மலரில் வெளியிடப்பட்ட அந்த செய்திகளைக் கீழே காணலாம்:-

world bank

TOyotto

FOrd

America

AirAsia