Home கலை உலகம் சூப்பர் ஸ்டாரின் மனதை கவர்ந்த முண்டாசுபட்டி!

சூப்பர் ஸ்டாரின் மனதை கவர்ந்த முண்டாசுபட்டி!

667
0
SHARE
Ad

rajiniசென்னை, ஜூன் 16 – பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி.வி.குமாரின் திருகுமரன் என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் கடந்த வெள்ளிகிழமை வெளியான ‘முண்டாசுபட்டி’ திரைபடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்தார்.

படத்தை பார்த்த பின், ‘முண்டாசுபட்டி’ தன் மனதை கவர்ந்ததாகவும், மனம் விட்டு பல இடங்களில் சிரித்ததாகவும் கூறினார். படத்தில் நடித்த விஷ்ணு விஷால், நந்திதா மற்றும் படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டினார்.

குறிப்பாக முனிஸ் காந்த் கதாபாத்திரத்தில் நடித்த ராமதாஸ் மற்றும் காளியின் நடிப்பை வெகுவாக ரசித்ததாக சூப்பர் ஸ்டார் கூறினார். படத்தின் இயக்குனர் ராம்குமார், ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோரையும் வெகுவாக பாராட்டினார்.

#TamilSchoolmychoice

குடும்பத்துடன் ரசிக்க கூடிய சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை தந்தமைக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி.வி.குமார் ஆகியோருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.