Home இந்தியா வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி23 ஏவுகணை: விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி23 ஏவுகணை: விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு!

605
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 1 – பிரான்ஸ், கனடா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகளின் 5  செயற்கைகோள்களுடன், பி.எஸ்.எல்.வி. – சி23 ஏவுகணை நேற்று காலை  9.52 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதை நேரில்  பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளை  பாராட்டினார்.

Indian Space Research Organization launches PSLV-C23 carrier rocket

( ஏவுகணை விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ள காட்சி )

#TamilSchoolmychoice

ஏவுகணை ஏவுவதை நேரில் பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று  டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து, பின்னர்  ஹெலிகாப்டரில் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு சென்றார்.

Indian Space Research Organization launches PSLV-C23 carrier rocket

( பி.எஸ்.எல்.வி.-சி23 ஏவுகனை விண்ணில் பாய்ந்த காட்சி )

ஸ்ரீஹரிகோட்டா  சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து திட்டமிட்டப்படி  நேற்று காலை 9.52 மணிக்கு பிஎஸ்எல்வி – சி23 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Indian Space Research Organization launches PSLV-C23 carrier rocket

( பி.எஸ்.எல்.வி ஏவுகனை தலைமை நிர்வாகி ராதாகிருஷ்ணனை மோடி பாராட்டிய காட்சி )

ஏவுகணை விண்ணில் சீறி பாய்ந்ததும், அங்கிருந்த விஞ்ஞானிகள்  ஒருவரை ஒருவர் கட்டி தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஏவுகனை  வெற்றிகரமாக ஏவப்பப்பட்டதை தொடர்ந்து,

 

Indian Space Research Organization launches PSLV-C23 carrier rocket

( இஸ்ரோ விஞ்ஞானிகளை மோடி பாராட்டிய காட்சி ) 

இஸ்ரோ தலைவர்  ராதாகிருஷ்ணன் உள்பட விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி  வாழ்த்து தெரிவித்தார். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர்  கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

படம்: EPA