Home நாடு மலேசிய தூதரக அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு: குற்றவாளியை ஒப்படைப்பதில் அரசு தயக்கம் காட்டாது!

மலேசிய தூதரக அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு: குற்றவாளியை ஒப்படைப்பதில் அரசு தயக்கம் காட்டாது!

475
0
SHARE
Ad

Malaysian diplomat extradited over alleged sexual assault in New Zealand

புத்ராஜெயா, ஜூலை 01 – நியூசிலாந்து சட்டப்படி, கொள்ளை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மலேசிய தூதரக அதிகாரியை மீண்டும் நியூசிலாந்திடம் ஒப்படைப்பதில் மலேசியாவிற்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அனிபா அமான் (படம்) இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இது குறித்து விஸ்மா புத்ராவில் இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அனிபா பேசுகையில், “அது தேவைப்படும் பட்சத்தில் (குற்றவாளியை ஒப்படைப்பது) நியூசிலாந்து அரசாங்கம் கோரிக்கை விட வேண்டும். விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முகமட் ரிஸால்மான் இஸ்மாயில் (வயது 38) என்ற அந்த நபர் மலேசிய தூதரகத்தில் இரண்டாம் பிணை அதிகாரி என்ற நிலையில், பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றினார் என்றும் அனீபா குறிப்பிட்டார்.

படம்: EPA