ஜூலை 2 – கண்ணில் கண்டதையெல்லாம் தின்று தேவையில்லாமல் உடல் எடையைத் தாறுமாறாக ஏற்றிவிட்டு, பின்னர் வருந்தி அவஸ்தைப்படுபவர்கள் ஏராளம்! மேலும் அத்தகையவர்கள் அந்த எடையை எப்படி குறைக்கலாம் என்று அல்லாடுவார்கள்.
அதற்காக திடீரென்று உணவைக் குறைப்பார்கள். பட்டினி கூட இருப்பார்கள். காலையிலோ, மாலையிலோ ஓடவும் செய்வார்கள். ஆனால் எல்லாம் சில நாட்களுக்குத் தான். பிறகு, வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிவிடும்.
ஆனால் சில உணவுப் பொருட்களைக் கொண்டே நிறையக் கலோரிகளை எரித்து, நம் எடையை நன்றாகக் குறைக்க முடியும். அவை எடையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவுகின்றன.
இதுப்போன்ற உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டாலே போதும். அதே நேரத்தில் உடற்பயிற்சியையும் தவறாமல் செய்ய வேண்டும். இங்கு அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா?
திராட்சை:
திராட்சைப் பழங்கள் நம் உடலின் மெட்டபாலிசத்தைத் துரிதப்படுத்தி, ஏராளமான கலோரிகளைக் கரைக்க உதவுகின்றன. இதில் நிறைய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைச் சீராக வைக்க முடியும்.
திராட்சை சாப்பிடுவதால் வயிறும் வேகமாக நிரம்பிவிடும். இதைப் பச்சடியில் சேர்த்துச் சாப்பிடலாம் அல்லது ரசம் செய்தும் குடிக்கலாம்.
இந்த செலரி கீரையில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் என்பதால் உணவைக் கட்டுப்படுத்த முடியும். இதில் கலோரியும் குறைவாக உள்ளது. செலரி கீரையை மற்ற உணவுகளோடு சேர்த்துச் சாப்பிடுவது நலம்.
பதப்படுத்தப்பட்ட தானியங்களை விட முழு தானியங்கள் நமக்கு மிகவும் நல்லது. இவற்றில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம்.
ஆனால் கொழுப்பு குறைவு தான்! இவை நாள்பட்ட வியாதிகளையும் குறைக்க வல்லவை. இவை மெதுவாகவே செரிக்கும் என்பதால், நமக்கு நீண்ட நேரத்திற்குப் பசி எடுக்காது.
இப்போதெல்லாம் நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்ட க்ரீன் டீ, எப்போதுமே நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிலும் மெட்டபாலிசத்தைத் துரிதப்படுத்த, உடல் எடையைக் குறைக்க என்று இதன் நன்மைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த உணவுகளை எடுத்துக்கொள்வோம் உடல் எடையைக் குறைப்போம்.