Home கலை உலகம் சூர்யாவுக்கு ஜோடியாக 34 வயதான பிரபல மலையாள நடிகை!

சூர்யாவுக்கு ஜோடியாக 34 வயதான பிரபல மலையாள நடிகை!

536
0
SHARE
Ad
manju-warrier_137102053521

சென்னை, ஜூலை 2 – 34 வயதான மலையாள நடிகை மஞ்சு வாரியார், தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்ற செய்தி பிரபல வார இதழான குங்குமத்தில் வெளியாகியுள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே மலையாள திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகிய மஞ்சு, தான் நடித்த அத்தனை திரைப்படங்களிலும் அபாரமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி மலையாள திரையுலகின் கனவு கன்னியாக திகழ்ந்தார்.

15 ஆண்டுகளுக்கு முன், முன்னணி மலையாள நடிகர் திலிப்பை காதல் திருமணம் புரிந்து வாழ்க்கை நடத்திய இவர், இப்போது குடும்ப பிரச்சனை காரணமாக அவரிடமிருந்து பிரிந்து மீண்டும் திரையுலகில் கால் பதித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

எது எப்படியோ மஞ்சு மீண்டும் திரையுலகிற்கு வருவதை அவரின் இரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.

இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், மஞ்சு வாரியாருக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். அப்படி இருந்தும் இன்னும் அதே இளமைத் துடிப்புடனும், அழகுடன் மஞ்சு மிளிர்கிறார் என அவரை அண்மையில் சந்தித்த திரையுலக பிரமுகர்கள் கூறுகின்றனர்.