கோலாலம்பூர், ஜூலை 2 – நியூசிலாந்து நாட்டில் பெண் ஒருவரிடம் பாலியல் மற்றும் கொள்ளை குற்றம் புரிந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள மலேசிய தூதரக அதிகாரி முகமட் ரிஸல்மான் இஸ்மாயிலை (படம்) எந்த நாட்டு நீதிமன்றத்தில் நிறுத்துவது என்ற குழப்பம் நீங்கி, அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மலேசிய அரசாங்கமே விசாரணை செய்யட்டும் என இரு நாட்டு அரசாங்கமும் முடிவுக்கு வந்துள்ளது.
மலேசிய தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரியான ரிஸல்மானை, விசாரணை செய்யும் பொறுப்பை நாட்டின் பாதுகாப்புத் துறை ஏற்றுள்ளது.
விசாரணையில் அவர் குற்றம் செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவர் இராணுவ விசாரனை நடைபெறும்.
இது குறித்து நியூசிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் முரே மெக்குலி கூறுகையில், இந்த விவகாரத்தில் மலேசியாவின் செயல்பாடுகளின் மீது முழு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.