Home கலை உலகம் ஆர்யா நன்றாக கடலை போடுவார் – நயன்தாரா

ஆர்யா நன்றாக கடலை போடுவார் – நயன்தாரா

664
0
SHARE
Ad

Nene-Ambaniசென்னை, ஜூலை 2 – ஆர்யா குடும்பத்தில் நானும் ஒருத்தி என்றார் நயன்தாரா. நடிகர் ஆர்யாவுடன் நிலா, நயன்தாரா, அனுஷ்கா, எமி ஜாக்சன் என பல கதாநாயகிகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர் ஆரியா.

இந்நிலையில் ஆர்யா தனது தம்பியை கதாநாயகனாக வைத்து அமரகாவியம் என்ற படத்தை தயாரிக்கிறார். ஜீவா சங்கர் கையக்குகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இதில் இயக்குனர் பாலா, நடிகர் பார்த்திபன், திரிஷா, நயன்தாரா, பூஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பங்கேற்றது குறித்து நயன்தாரா கூறும்போது, “ஆர்யா குடும்பத்தில் நானும் ஒருவர். அவருடன் உள்ள நட்பிற்காகவே இந்த விழாவில் கலந்துகொண்டேன்.

#TamilSchoolmychoice

arya-nayantharaஅவருடன் படத்தில் நடிக்கும் எல்லோரையும் அவர் நன்றாக பார்த்துக்கொள்வார். என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். அதனால்தான் அவரை எல்லோருக்கும் பிடிக்கிறது.

ஆர்யாவுடன் பல கதாநாயகிகளை இணைத்து கிசுகிசு வருகிறது. என்னையும் அவருடன் இணைத்து கிசுகிசு வந்திருக்கிறது. அதெல்லாம் உண்மைதான். அதற்கு காரணம் ஆர்யா கடலை போடுவதுதான். அதனால்தான் அவரிடம் எல்லோரும் அன்பாக இருக்கிறோம் என்றார்.

இப்படத்தின் டிரைலர், பாடல்களை ஏற்கனவே பார்த்துவிட்டேன். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திரிஷாவை ஆர்யா கட்டி தழுவி வரவேற்றார்.