Home தொழில் நுட்பம் சாம்சுங் கேலக்ஸி எஸ்5 மினி வெளியானது!

சாம்சுங் கேலக்ஸி எஸ்5 மினி வெளியானது!

462
0
SHARE
Ad

S5Mini-Press-02-580-90

கோலாலம்பூர், ஜூலை 3 – சாம்சுங் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான சாம்சுங்  கேலக்ஸி எஸ்5 மினியினை அறிமுகப்படுத்தியது.

சாம்சுங்  கேலக்ஸி எஸ்5 போன்றே பல்வேறு வசதிகளுடன் வெளி வந்துள்ள கேலக்ஸி எஸ் 5 மினியின் விலை தற்சமயம் நிர்ணயிக்கப் படவில்லை.

#TamilSchoolmychoice

இன்னும் சில நாட்களில் ரஷ்யாவில் இந்த திறன்பேசிகள் சந்தைப்படுத்தப்பட இருப்பதாகவும், விரைவில் உலகம் முழுவதும் அதன் வர்த்தகம் தொடங்கும் எனவும் சாம்சுங்  நிறுவனம் அறிவித்துள்ளது.

சாம்சுங்  கேலக்ஸி எஸ்5 மினியின் சிறப்பு அம்சங்கள்:-

4.5 அங்குல அளவு கொண்ட கேலக்ஸி எஸ் 5 மினி 720 X 1280 ஹெச்டி பிக்சல் தீர்மானம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 1.5ஜிபி முதன்மை நினைவகமும், 1.4GHz திறன்வாய்ந்த  குவாட் கோர் செயலியும் இதில் உள்ளன. மேலும், கேலக்ஸி எஸ் 5 போன்றே இதயத் துடிப்பை அளக்கும் உணர்த்திகள், கைரேகை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம் மற்றும் சாம்சுங்  திறன் கைகடிகாரங்களை இயக்குவதற்கான செயலிகள் உட்பட பல சிறப்பான வசதிகளை இந்த சாம்சுங்  மினி கொண்டுள்ளது.

ஆண்டிராய்டு 4.4 கிட்கேட் இயங்குதளத்தில் இயங்கக் கூடிய இந்த திறன்பேசிகள்  2100mAh மின்சேமிப்பு காலங்கள், 8 மெகா பிக்சல் ஆட்டோ ஃபோகஸ் கேமரா மற்றும் காணொளி அழைப்புகளுக்காக 2.1 மெகா பிக்சல் கொண்ட முன்புற கேமரா ஆகிய சிறப்புக் கூறுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவில் சந்தைப்படுத்தப்பட இருக்கும் இந்த திறன்பேசிகள் கேலக்ஸி எஸ் 5 போன்று சிறப்பான வர்த்தகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.