சென்னை, ஜுலை 4 – அண்மையில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும், ‘சைவம்’ படத்தில் பேபி சாராவுக்கு அம்மாவாக நடித்த நடிகை வித்யா, தன் பட்ட படிப்பை விஞ்ஞான துறையில் முடித்து தற்போது சென்னையில் இருக்கும் பிரபல கண் சிகிச்சை மருத்துவமனையில் பணிபுரிகிறார்.
சிறுவயது முதல் நடனத்தில் மிக ஆர்வம் கொண்ட இவர், கேரளாவில் நடைப்பெற்ற நடன போட்டியில் கலந்துக் கொண்டதன் மூலம் திரைபடத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடித்த ‘கம்மத் & கம்மத்’ எனும் மலையாள திரைப்படமே இவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. தமிழில் விஜய் இயக்கத்தில் ‘சைவம்’ படத்தை முடித்துவிட்டு ‘தலகால் புரியல’ எனும் படத்தில் தொடர்ந்து நடிக்கிறார் வித்யா.
மேலும், இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ‘ரொனாக்’ எனும் ஆல்பம் செய்வதிலும் ஆர்வமாக உள்ளார்.
இருப்பினும், விஞ்ஞான துறையில் “ஸ்டெம்செல்” பயன்படுத்தி பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை வரவழைக்கும் ஆராய்ச்சியில் முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதனால், தன் ஆராய்ச்சி துறையை பாதிக்காது வெறும் விளம்பர படங்களில் நடிப்பதையே விருப்புகிறார் விஞ்ஞானி வித்யா.
தான் மேற்கொள்ளும் “ஸ்டெம்செல்” ஆராய்ச்சியில் வெற்றிப் பெறுவதே தன் முதல் இலட்சியமாக கொண்டுள்ளார் வித்யா.