Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : “மரக்கறி மெஸ்” உள்ளூர் சமையல்கலை நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ : “மரக்கறி மெஸ்” உள்ளூர் சமையல்கலை நிகழ்ச்சி

770
0
SHARE
Ad

 

  • ‘மரக்கறி மெஸ்’ எனும் உள்ளூர் தமிழ் சமையல் நிகழ்ச்சி ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது
  • மார்ச் 18, வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட்-இல் தொடங்குகிறது

கோலாலம்பூர் : மார்ச் 18, இரவு 7.30 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் மரக்கறி மெஸ் எனும் சுவையானச் சைவ உணவு வகைகளைச் சமைக்கும் முறைகளைக் காண்பிக்கும் உள்ளூர் தமிழ் சமையல் நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

#TamilSchoolmychoice

புஸ்பா நாராயண் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், உள்ளூர் சமையல்காரரான ராஜேஷ் கண்ணா இந்திய, ஆசிய மற்றும் மேற்கத்தியச் சைவ உணவு வகைகளைச் சமைத்து அசத்துவார். தோட்டத்தில் இருந்து அறுவடைச் செய்யப்பட்டக் காய்கறிகள் உட்படப் புதிய பொருட்களைப் பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படும்.

மரக்கறி மெஸ் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும். வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு வகையானச் சமையல் குறிப்புகளை வழங்கும். மேலும் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்த மற்றும்  கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்புகள் மற்றும் குறைந்த ஆரோக்கியமானச் சைவ உணவு வகைகளைப் பற்றிய விழிப்புணர்வையும் உருவாக்கும்.

முதல் ஒளிபரப்புக் காணும் இந்நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையில் ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் கண்டுக் களிக்கலாம். மரக்கறி மெஸ் நிகழ்ச்சியை ஃபெர்ன்லீஃப் (Fernleaf) வழங்குகிறது.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.