Home Uncategorized அருண் துரைசாமி மீது, ஒரு தலைப்பட்ச மதமாற்றக் கருத்துகளுக்காக, காவல் துறை விசாரணை

அருண் துரைசாமி மீது, ஒரு தலைப்பட்ச மதமாற்றக் கருத்துகளுக்காக, காவல் துறை விசாரணை

757
0
SHARE
Ad
அருண் துரைசாமி

கோலாலம்பூர் : இந்திரா காந்தி நடவடிக்கைக் குழுவின் தலைவர் அருண் துரைசாமி மீது காவல் துறை விசாரணைகளைத் தொடக்கியிருக்கிறது. தன் முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்ட கருத்துகளுக்காக விசாரணைகளை காவல் துறை முடுக்கி விட்டிருக்கிறது.

அண்மையில் சர்ச்சைக்குள்ளான லோ சியூ ஹோங் விவகாரம் குறித்து தன் முகநூலில் பிப்ரவரி 25-ஆம் தேதியன்று கருத்து தெரிவித்த அருண், லோ சியூ ஹோங்கின் பிள்ளைகள் சட்ட முறைப்படி இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் என்றும் இஸ்லாம் மதத்தினர் அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட அருண், தன் பேச்சுரிமைகளுக்கு எதிரானது இந்த காவல் துறை நடவடிக்கை எனக் கூறினார். சட்டத்தில் உள்ளவற்றையும் நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும்தான் நான் விவரித்திருக்கிறேன், அதற்காக ஏன் இந்த விசாரணை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

பொய்ச் செய்திகளைப் பரப்புவதாகவும் பொதுமக்களிடையே இனத் துவேஷத்தை விதைப்பதாகவும் கூறும் காவல் துறையினர் என்னிடம் விசாரணையின்போது 27 கேள்விகளை கேட்டனர் என்றும் அவர் கூறினார்.

அருண் மீதான விசாரணைகளை புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் அப்துல் ஜாலில் ஹாசான் உறுதிப்படுத்தியுள்ளார்.