Home இந்தியா இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-விசா! மத்திய அரசு புதிய திட்டம்!

இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-விசா! மத்திய அரசு புதிய திட்டம்!

677
0
SHARE
Ad

e-visaடெல்லி, ஜூலை 4 – இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-விசா எடுத்துக்கொள்ள மத்திய அரசு 40 நாடுகளுக்கு அனுமதியளிக்க உள்ளது.

இதனால் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து, அதன்காரணமாக உள்நாட்டு வணிகர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NorthIndia_1_News__1221078fஎலக்ட்ரானிக் சுற்றுலா அங்கீகார (இடிஏ) திட்டப்படி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இனையத்தளம் மூலமாக விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். அதைப்போல, ஐந்து வேலை நாட்களுக்குள் விசா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை இனையத்தளம் மூலமாக தெரியப்படுத்தப்படும்.

#TamilSchoolmychoice

இந்த திட்டத்துக்கு, வரும் டிசம்பர் மாதத்திற்குள் பிரதமர் அலுவலகம் அனுமதியளிக்கும் என்று தெரிகிறது. விசா சீரமைப்பு திட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Tamil_News_29793512822அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட மொத்தம் 40 நாடுகளுக்கு இதுபோன்ற அனுமதி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து டெல்லியை சேர்ந்த சுற்றுலா முகவர்களின் அதிபர் ஜோதி கபூர் கூறுகையில், “சுற்றுலா துறை வளர்ச்சிக்கு  விசா விதிமுறைகளின் தளர்ச்சி அவசியம்.

india_tajm“இ-விசா” திட்டத்தால் சுற்றுலா பயணிகள் வருகை அடுத்தாண்டில் சுமார் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்” என்றார். ஆப்கானிஸ்தான் நாட்டினரை அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரையில், இந்தியாவில் தங்க அனுமதிக்கவும் விசா விதிமுறை தளர்த்தப்பட உள்ளது.

அதே வேளையில், இதை வைத்து குற்றச்செயல்களில் பிற நாட்டினர் ஈடுபடாமல் தடுக்கவும் போதிய கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.